திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் கிரிவலம் செல்வது வழக்கம். அதே சமயம் முக்கியமான பௌர்ணமி நாட்களிலும் பக்தர்களின் வசதிக்காக பல ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்

நிலையில் இந்த மாதம் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு  மே 4, 5 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இதனைப் போலவே திருவண்ணாமலையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் 5.35 மணிக்கு வேலூர் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.