
சமூக ஊடகங்களில் தற்போது திருமண விழாவில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று வெகுவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜெய்மாலா விழாவின் போது, மணமகன் மேடையில் கையை நீட்ட, மணமகள் திடீரென கோபத்தில் அவர்மீது துப்புவதைக் காணலாம். இந்த காணொளி எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பான நம்பகத்தன்மையை ஊடகங்கள் உறுதிப்படுத்தவில்லை.
वरमाला के समय लड़की का हाथ थामने के लिए जैसे ही लड़के ने हाथ आगे बढ़ाया लड़की ने हाथ पर थूक दिया ,
अगर लड़की शादी से खुश नहीं थी तो इतना बखीरा खड़ा करने की क्या जरूरत थी ,
लड़के की कितनी बेज़्जती हुई होगी ,क्या लगता इसके बाद लड़के ने शादी की होगी?pic.twitter.com/uRi1LX9TBO
— Shivam Yadav (@ShivamYadavjii) May 14, 2025
இந்த வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்களில் பிளவுபடுத்தும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. சிலர், மணமகனிடம் பெண் காட்டிய இந்த நடத்தை அநாகரீகத்தின் உச்சம் என கண்டித்து, “அவமானம் ஏற்பட்ட அந்த மணமகன் உடனடியாக மேடையை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்” எனக் கூறுகின்றனர். மேலும், அந்தப் பெண் தனது தவறை ஏற்றுக்கொண்டாலுமே திருமணம் நடக்கக்கூடாது என கருத்துகள் எழுந்துள்ளன.
மற்றொரு பக்கம், சில நெட்டிசன்கள், “இந்த பெண் தனது விருப்பத்திற்கு மாறாக திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம்” என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், பெண் கோபத்துடன் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.. ஆனால், இது ஒரு சமூக ஊடக வைரலாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட நகைச்சுவை நிகிழ்ச்சி என வேறு சிலர் சந்தேகிக்கின்றனர்.
இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளும், காட்சிகளும் விரைவாக பரவும் சூழ்நிலையில், இவ்வாறு வைரலாகும் வீடியோக்கள் உண்மையா அல்லது நாடகமா என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில் பொதுமக்கள் குழப்பத்திலும், விமர்சனத்திலும் உள்ளனர். எது உண்மை, எது வதந்தி என்பதைக் கண்டறிவது கடினமாக இருக்கின்றது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.