சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்சன் பாரா என்ற பழங்குடியின மக்கள் திருமணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் வினோத வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது என்றும் திருமணம் முழுமை அடையாது என்பதும் இந்த மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த பெண் வீட்டார் கூறுகையில், அந்த காலத்தில் எல்லாம் 60 பாம்புகளை கொடுப்போம். ஆனால் இப்போது 21 பாம்புகள் மட்டும் தான் கொடுக்கிறோம் என்று கவலையுடன் தெரிவித்தார். சாரைப்பாம்பு, பச்சை பாம்பு மற்றும் நல்ல பாம்பு என பலவகை பாம்புகளை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வினோத சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.