திருப்பூர் நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூரில் நடந்த ஒரு விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.. திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்..

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாளையம் பகுதியில் நல்லூருக்கு அருகாமையில் விஜயபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவரது குழந்தையின் பெயர் திவ்யதர்ஷினி. இந்த சிறுமி விஜயபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 3வது வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்து தனது குழந்தையை விஜயபுரம் பகுதியை  சேர்ந்த ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த போது, எதிரே வந்த காவல்துறை வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது..

இதனையடுத்து வாகனத்தை சிறைபிடித்த அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தொடர்ந்து சிறுமி இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதிக்கு காவலர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.. இந்த விபத்து குறித்து முழு தகவல்கள் வெளிவரவில்லை..

முதற்கட்டமாக வரப்பட்ட தகவல் பொறுத்த வரை வீரசின்னான் என்ற காவலர் வாகனத்தை ஓட்டிவந்துள்ளார்.. காவல்துறை வாகனம் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை வாகனம் எதிரே வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் வளைவில் திரும்பும் போது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி ராஜேஸ்வரி கீழே விழுந்தார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த சிறுமியின் மீது மோதி  தடுப்பு சுவரின் மீது இடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். இதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்னர்.இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.