திருப்பதி மலைப்பாதையில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்புக்கு தடி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்களை சிறுத்தைகள், கரடிகள் தொடர்ந்து தாக்கி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. படிகள் ஏறுமிடத்தில் தடியை கொடுக்க உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே 12 வயதுக்கு உட்பட் சிறுவர்களுக்கு பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

திருப்பதி மலையில் பக்தர்களை சிறுத்தைகள் தொடர்ந்து தாக்கி வருவதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தைகள் மட்டுமின்றி கரடிகளும் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில தினத்திற்கு முன் லட்ஷிதா(6) என்ற சிறுமி  திடீரென காணாமல் போன நிலையில், காயங்களுடன் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.