இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாக்பத் என்ற மாவட்டத்தில் உள்ள கெட்கி கிராமத்தில் மக்களின் பாதுகாப்பு நடனை கருதி தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்தில் பொதுமக்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறக் கூடாது என்பதற்காக 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலமாக கிராமம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் 24 மணி நேரமும் அந்த கிராமத்தின் கிராம பஞ்சாயத்து பவானியில் இருந்து கேமராக்கள் கண்காணிப்பு செய்யப்படுவதாகவும் சந்தேகப்படும்படியான நபர்கள் அல்லது வாகனங்கள் வந்தால் அதனை தீவிர விசாரணை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில முழுவதும் மக்களின் நலனுக்காக சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்றும் அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் உத்திர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.