நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் எந்த நிலையில் இருக்கின்றார்…. பார்ட்டியின் உடைய தலைவர் யார் ? 1920 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய சக்தி கிடைத்தது. புதிய கொடி கிடைத்தது.

நாடு அந்த கொடியை ஏற்றுக்கொண்டதும் காங்கிரஸ் உடனடியாக அந்தக் கொடியின் வலிமையை பார்த்து.. அதனை திருடி கொண்டது. 1920 லிருந்து இந்த விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்திய மூவர்ண கொடியை பார்க்கும் போது காங்கிரஸ் கொடி மக்களுக்கு ஞாபகம் வரும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மக்களை ஏமாற்றுவதற்காக காந்தியின் பெயரையும் அவர்கள் திருடி கொண்டார்கள். காங்கிரஸின் சின்னங்களை பாருங்கள்…  இரண்டு மாடுகள், பசுவும் கன்றும் பிறகு கை. இந்த சின்னங்கள் எல்லாம் ஒரு குடும்பத்தின் கையில் அனைத்தும் அடங்கி விட்டது என்பதை நமக்கு தெரிவிக்கின்றது.

இது இந்தியா கூட்டணி அல்ல ஒரு ஆணவ கூட்டணி. இது இந்தியா கூட்டணி அல்ல கமெண்ட்டியா கூட்டணி. இந்த கூட்டணியில் ஒவ்வொருவரும் மாப்பிளை ஆக விரும்புகின்றார்கள்,  அனைவரும் பிரதம மந்திரி ஆக விரும்புகிறார்கள். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  இந்த கூட்டணி எதை பற்றியும் யோசிக்கவில்லை. எந்த மாநிலத்தில் எந்த கட்சியுடன் சேர்ந்து இருக்கிறார்கள் என்பது பற்றி யோசிக்கவில்லை என தெரிவித்தார்.