
தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. உள் மாநிலம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்காக முன்னதாகவே தேவஸ்தானத்தின் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இந்நிலையில் திருமலை திருப்பதி கோவிலில் இம்மாதம் 11ஆம் தேதி தரிசனம் நிறுத்தப்படும் என டிடிடி அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாதம் 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, 11ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 6 மணிக்கு தொடங்கி 5 மணி நேரம் நடைபெறும் என்றும், அப்போது பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய முடியாது என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதியம் 12 மணி முதல் தரிசனம் அனுமதிக்கப்படும் என்று டிடிடி அதிகாரிகள் தெரிவித்தனர்.