திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்தார். இந்த நிலையில் மேடையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டது. மத்திய அரசிடம் 37907 கோடி ரூபாய் நிதி கேட்டோம். இரண்டு மத்திய அமைச்சர்கள் வந்தார்கள். நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக பேசி நிதி கேட்டோம். ஆனால் மத்திய அரசு 276 கோடி ரூபாய் மட்டும் தான் நிதி கொடுத்தது.

மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருந்தால் மட்டும் போதுமா? தமிழ்நாட்டுக்கு என சிறப்பு திட்டங்கள் கிடையாதா? மத்திய பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் இல்லை. தேர்தலின் போது ஓட்டு கேட்க மட்டும் தான் இங்கு வருவார்களா? திருநெல்வேலி அல்வா உலக அளவு பேமஸ். ஆனால் மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் அல்வா அதைவிட பேமஸ் பேசியுள்ளார்.