திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம், 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ், திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் 5,500 பயணிகளை கையாளும் வகையில் இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீரை விமான நிலையத்தின் உள்ளேயே மறுசுழற்சி செய்ய முடியும். 4 நட்சத்திர புள்ளிகள் பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையம் இதுவாகும். இந்த புதிய முனையம் ரூ.1,100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.