தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இருபது வருடங்களை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்து விட்டார். விஜய்யுடன் லியோ, கடைசியாக அஜித்துடன் விடாமுயற்சி படத்தில்  நடித்திருந்தார் .

அடுத்து இவருடைய நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவருடைய பேவரைட் நடிகர் யார் என்று பேசிய வீடியோவானது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “அவர் தான் நடிக்க வருவதற்கு முன்பாகவே தன்னுடைய பேவரைட் ஹீரோ அஜித் தான் என்று கூறியுள்ளார். அடுத்ததாக பிடித்த ஹீரோ விக்ரம் என்றும் இவர்களை தொடர்ந்து சூர்யா மற்றும் விஜய் தன்னுடைய பேவரைட் லிஸ்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் மற்றவர்களுடன் பார்க்கும் பொழுது அஜித் எப்போதுமே தன்னுடைய பேவரைட் லிஸ்டில் ஒரு படி மேலே தான் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.