திரிபுராவில் வெள்ளிக்கிழமை துணை முதல் மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்த பகுதிகளில் வசித்து வருபவர்கள் 4ஜி செறிவூட்டல்  திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 129 தொலைதூர கிராமங்களில் செல்போன் டவர்களை நிறுவ இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 583 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கப்படுகிறது.

இதற்காக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தகுதியை ஆய்வு செய்வதற்காக மறு ஆய்வு செய்யப்படுகிறது. திரிபுராவிற்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவியின் கீழ் இரண்டு இணைய இணைப்புகள் திட்டங்களுக்காக மத்திய அரசு 50 கோடி நிதியை அனுமதித்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு பைபர் இணைப்புகளை வழங்குதல் மற்றும் பொது வைபை ஹாட்ஸ்பாட் போன்றவற்றை வழங்குதல் ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணி பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.