சென்னையில் கேரளா மீடியா அகாடமி, சென்னை மலையாளி சங்கத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடும் கேரளாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இந்தியாவிற்கு விடியலை தர வேண்டும். நாம் அனைவரும் திராவிட மொழி எனும் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை ஒன்றாக எதிர்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஊடகத்தினரை உருவாக்குவதில் மலையாள அகாடமி முக்கிய பங்காற்றுகிறது” என தெரிவித்துள்ளார்.