
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் கழிப்பறை மற்றும் குடியிருக்கும் இடம் தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும் கருணாநிதியின் பெயர் மட்டும் தான் வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மற்ற தலைவர்களே இல்லையா. ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்.
ஜல்லிக்கட்டு முதல் மருத்துவமனை வரை அனைத்துக்கும் கருணாநிதி பெயர் தான். விட்டால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா அடையங்களையும் மூடிவிட்டு அனைத்திற்கும் கருணாநிதியின் பெயரை வைத்து விடுவார்கள். வேண்டுமெனில் தமிழ்நாட்டுக்கு கூட கருணாநிதி நாடு என்று பெயர் மாற்றி விடுங்கள் என்றார்.
அதன்பிறகு எனக்கு எப்போதுமே இஸ்லாமிய மக்கள் ஓட்டு போட்டது கிடையாது. அவர்கள் இனியும் ஓட்டு போடுவார்களா என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மேலும் இஸ்லாமியர்கள் இறைதூதரே வந்து சொன்னாலும் திமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவார்கள். அவர்கள் எனக்கு மட்டும் ஓட்டு போட மாட்டார்கள் கேட்டால் நீங்கள் இறைதூதரே கிடையாது என்று கூறிவிடுவார்கள். இதற்கு காரணம் நான் பாஜகவின் பீ டீம். நான் பாஜகவின் பி டீம் என்றால் ஏடீம் யார்.? மேலும் திமுக தான் பாஜகவின் ஏ டீம் என்பதால்தான் எங்களை பி டீம் என்று கூறுகிறார்கள் என்றார்.