
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தான் போட்டி என நேரடியாக பேசினார். மேலும் அவர் திமுக மற்றும் பாஜக கட்சி தலைவர்களை நேரடியாக விமர்சித்து பேசினார்.
அவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, திமுகவை எதிரி என்று அறிவித்த சகோதரர் விஜயின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.