நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இன்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், திமுக எம்பிக்களை நாகரீகம் அற்றவர்கள் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒரு மணி நேரத்தில் தான் சொன்ன கருத்து உங்களை பாதித்திருந்தால் அதனை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று தர்மேந்திர பிரதான் கூறினார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அண்ணாமலை தற்போது ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,

பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.

முதல் கேள்வி:

திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர ஓராதான் அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது கேள்வி:

மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?

உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?

மூன்றாவது கேள்வி:

யார் அந்த சூப்பர் முதல்வர்?

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, திரு. சூப்பர் முதல்வர்  அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது என்று பதிவிட்டுள்ளார்.