சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக தினந்தோறும் ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார்