
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் இடையே திருமணம் மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்த திருமண விழா வருகின்ற 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் மும்பை நகரமே களைகட்டி உள்ளது. இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு பிரபலங்களும் மும்பைக்கு வருவதால் மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்காக ஆனந்த் அம்பானி பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறார். குறிப்பாக ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை அவர் செலவு செய்துள்ளார். இவ்வளவு பெரும் தொகையை செலவு செய்தாலும் அவருடைய மொத்த சொத்தில் இது வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும்.
அதோடு இந்தியாவில் ஒரு சராசரி குடும்பம் திருமணத்திற்காக செலவு செய்வதைவிட அம்பானி குடும்பம் குறைந்த அளவிலேயே செலவு செய்துள்ளனர். அதாவது அவர்கள் தங்களுடைய சொத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை செலவு செய்யும் நிலையில் அம்பானி வெறும் 0.5 சதவீதம் மட்டும் தான் செலவு செய்துள்ளார். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10.25 லட்சம் கோடி ஆகும். இவர் ஒரு நாளைக்கு ரூ.3 கோடி வரை செலவு செய்தாலும் எந்த வேலையும் செய்யாவிட்டாலும் கூட அவருடைய சொத்து மதிப்பு குறைய பல வருடங்கள் ஆகுமாம். குறிப்பாக அவர் எந்த வேலையும் செய்யாமல் குடும்பத்துடன் ஒரு நாளைக்கு ரூ.3 கோடி செலவு செய்தாலும் சொத்துக்கள் முழுவதும் தீர 932 வருடங்கள் 6 மாதங்கள் ஆகும். மேலும் அதன்படி பார்த்தால் அம்பானியின் 12 தலைமுறைகள் ஒரு வேலையும் செய்யாமல் செலவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.