தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவிதேஜா. இவர் மாஸ் மகாராஜா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் தன்னுடைய 75வது படப்பிடிப்பின் சூட்டிங்கில் கலந்து கொண்ட போது திடீரென விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தசை பகுதி கிழிந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிதேஜாவுக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒரு சிறிய ஆப்ரேஷனுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். தற்போது நலமுடன் உணர்கிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஆப்ரேஷனுக்கு பிறகு ரவி தேஜா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் அவருக்கு காயம் அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால்  அவர் ஓய்வெடுக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.