மத்திய பிரதேஷ் மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாருக் மிஸ்ரா. இவர் கடந்த சில தினங்களாக கடுமையான நெஞ்சு வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவர் பங்கஜ் குப்தாவின் அரசு இல்லத்திற்கு சிகிச்சைக்காக ஷாருக் சென்றுள்ளார்.

மருத்துவரின் வீட்டிற்கு வெளியே சிகிச்சைக்காக காத்திருந்த இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை கவலை அடையச் செய்துள்ளது.