மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் 1,81,228 வாக்குகளைப் பெற்று நோட்டா 2-ம் இடத்தை பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் காந்தி இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றார். மேலும் இதன் காரணமாக அந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய முன்னாள் எம்பி சங்கர் லால்வானிக்கு எதிராக நோட்டாவுக்கு ஓட்டு போடுமாறு காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.