சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகரில் முருகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கப்பலுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு ஆண்டாள்(58) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த நான்காம் தேதி ஆண்டாள் தனது வீட்டில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றியுள்ளார்.

அப்போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆண்டாளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆண்டாள் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.