வேகமாக சென்றுக் கொண்டிருந்த ரயிலின் ஜன்னலின் வெளிப்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ உத்தரப் பிரதேசத்திலிருந்து (UP) எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, குறிப்பாக காஸ்கஞ்ச்-கான்பூர் ரயிலில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் 56 விநாடிகள் வரை வேகமாக செல்லும் ரயிலின் வெளிப்புறத்தில் தொங்கிய படி பயணம் செய்கிறார். பின்னர், யாரோ சங்கிலியை இழுத்ததால் ரயில் திடீரென நின்று விடுகிறது.

இதனால்  இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்து சிறிதளவு காயமடைகிறார். பின்னர், உடனே எழுந்து மீண்டும் ரயிலுக்குள் ஏறுகிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ள நிலையில், கான்பூர் ADG மண்டலத்தின் உத்தரவின் பேரில் GRP UP (Government Railway Police) விசாரணை மேற்கொண்டு, அக்ரா GRP SP-க்கு வழிகாட்டி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை போலீசார் எந்தவொரு அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் வெளியாகவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by LUCKNOW WALE (@lucknowwaleyt)