
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு பெண் அவருடைய 3 மகள்கள் மீது அங்கிருந்தவர்கள் திருட்டு பட்டம் சுமத்தியுள்ளனர். அதாவது அங்கிருந்த ஊழியர்கள் அவர்கள் மீது சந்தேகப்பட்டுள்ளனர் . அந்த சந்தேகத்தால் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்களின் முகத்தில் கரும்புள்ளி குத்தியதோடு நாங்கள் தான் திருடர்கள். எங்கள் தவறை ஒப்புக்கொள்கிறோம் என்று எழுதப்பட்ட பலகைகளை அவர்களுடைய கழுத்தில் மாலையாக தொங்கவிட்டனர்.
பின்னர் தாய் மற்றும் மகள்களை அவர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த தொழிற்சாலையில் உரிமையாளர் பர்வீந்தர் சிங், மேனேஜர் மன்ப்ரீத் சிங் மற்றும் முகமது கைஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தொழிற்சாலையில் உரிமையாளர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குழந்தைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.