
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முன்னதாக காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய் ஆகியோரின் பெரிய கட் அவுட்டுகள் அங்கு வைக்கப்பட்ட நிலையில் வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோர்களின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதன்பிறகு நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் கூட்டம் அலைமோதும்.
இந்த மாநாட்டில் விஜய் தன்னுடைய கொள்கைகள் மற்றும் 2026 தேர்தலில் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியிடுவது என பல்வேறு முடிவுகளை வெளியிட இருக்கிறார். இதன் காரணமாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போது மாநாடு நடைபெறும் அன்றைய தினம் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 2 டிஐஜி, பத்து காவல் கண்காணிப்பாளர்கள், 20 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 50 டிஎஸ்பி மற்றும் 200 ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.