
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் மாநாட்டை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது நடைபெற இருக்கும் மாநாட்ட எண்ணி என் மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. உங்களை பார்க்கும் நாளுக்காக காத்திருக்கிறேன். இந்த நிகழ்வான நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறேன். கழகத் தோழர்கள் எல்லாரையும் போலவே கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர் சிறுமியர்கள், பல காலங்களாக உடல்நலம் குன்றி இருப்பவர்கள், முதியவர்கள் என பலரும் பல்வேறு ஊர்களில் இருந்து மாநாட்டுக்கு வர திட்டமிட்டு இருப்பார்கள்.
அவர்கள் ஆவலை நான் மதிக்கிறேன். ஆனால் அதைவிட எனக்கு அவர்களுடைய உடல் நலம் ரொம்ப முக்கியம். எனவே உடல் நலன் கருதி அவர்கள் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்குமாறு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து வருவது அவர்களுடைய உடல் நலம் ஒத்துழைக்காது என்பதால் அவர்களின் குடும்ப உறவாக இருக்கும் உரிமையில் பணிவுடன் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக நம்முடைய வெற்றி கழக திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) October 20, 2024