தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தற்போதைய விக்கிரவாண்டியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஹோட்டல் அறைகள் முன்பதிவாக தொடங்கிவிட்டது.

அதாவது பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். அதேபோன்று மாநாட்டுக்கான மேடைகள் அமைக்கும் பணிகள் போன்றவைகளையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அதாவது மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் தங்களுடைய வாகனங்களின் ஆர்.சி புக்கை முன்னதாக பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பலரும் தங்கள் ஆர்.சி புக்கை அனுப்பி வருகிறார்கள். அதன்பிறகு மாநாட்டுக்கு வரும் தொண்டர்களும் நிர்வாகிகளும் வாகனங்களில் வரும்போது மிகவும் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வருமாறு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவிப்புகளை நேற்று தர்மபுரியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.