தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் பாஜக அரசின் மொழி திணிப்பு  தமிழக மீனவர்களுக்கான பாதுகாப்பின்மைக்கு கண்டடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ‌சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், மேலும் கச்சத்தீவை இந்தியா குத்தகை அடிப்படையில் பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களால் வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்படுவதாக தவெக கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், மலைக்கோட்டை மாநகரில் நடக்கும் மணல் கொள்ளையை கட்டுப்படுத்த, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெரிய நஷ்டங்களை சந்தித்த மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய  மொழி  சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளை தவெக கடுமையாக எதிர்க்கின்றது என்றும், தமிழை மட்டுமே தமிழகத்தில் நிரந்தர மொழியாக பாதுகாக்க வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி கிடையாது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் 2026 தேர்தலை களம் காண்போம் என்றும் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.