சென்னை பனையூரில் இன்று (ஜூலை 4) நடைபெற்று வரும்  தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய்யை தேர்வு செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், தேர்தலுக்கான முன்அறிவிப்பாகவே அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து, அதிமுக – தவெக கூட்டணிக்கு வாய்ப்பு குறைந்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பீடு செய்கின்றனர். ஆனால், தேர்தலுக்குத் தானே இன்னும் 9 மாதங்கள் இருப்பதாலும், அமைப்புக் கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது எனவும் குறிப்படுகின்றனர். எந்தக் கட்சியுடன் யார் கூட்டணி சேரப் போகின்றனர் என்பது இன்னும் உறுதியாகாமல் இருப்பது, எதிர்காலத்தில் புதிய அரசியல் திருப்பங்களை உருவாக்கக்கூடிய நிலையாக உள்ளதாகவே பார்வையிடப்படுகிறது.