
வெங்கட் பிரபு டைரக்டில் விஜய் நடிக்கவுள்ள “தளபதி 68” திரைப்படத்தின் அறிவிப்பு திடீரென்று வெளியானது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. விஜய் நடித்து வரக்கூடிய “லியோ” படத்தின் சூட்டிங் முடிவடைதற்கு முன்பே வந்த அந்த அறிவிப்பு குறித்து கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களும் லியோ’ ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பங்கேற்று பேசியதாவது, விஜய் திரைப்படம் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் அவரின் அனுமதி இன்றி வெளிவராது. அவரது அனுமதி பெற்று தான் தளபதி-68 அறிவிப்பையும் வெளியிட்டிருப்பார்கள் என்று பேசினார். எனினும் அது லியோ படத்திற்கு ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தன் கருத்தை மறைமுகமாக அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் வெளிப்படுத்தியுள்ளார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.