
வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் “லியோ” என்ற புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜயுடன் திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் தளபதி 67 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் லியோ திரைப்படம் குறித்து கூறியுள்ளார். அதாவது, “இப்படத்தின் கதை மீது எனக்கு அதிகளவு நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் என்னை வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கபோகிறார். மிகப் பெரிய நடிகர் விஜய். அவருடன் நான் இணைந்து நடிப்பது புதியதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.