
தமிழ் திரையுலகின் ஆக்சன் நடிகர்களில் முக்கியமானவர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்திருந்தது. இந்நிலையில் சரத்குமார் வரலட்சுமியின் கணவர் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை குடும்பத்தில் சேர்க்காதது போன்று காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சூரிய வம்சம் திரைப்படத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இதில் மகனாக நடித்த சரத்குமாரை தந்தை கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் குடும்பத்தில் சேர்க்காமல் குடும்ப புகைப்படம் எடுத்திருப்பார்கள்.
அந்த காட்சியை ரீ-மேக் செய்வதாக கூறி தல பொங்கல் கொண்டாட வந்த மகளையும் மாப்பிள்ளையும் வைத்து சரத்குமார் குடும்பத்தினர் காணொளி எடுத்துள்ளனர். அந்த காணொளியில் சரத்குமார் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்திருக்க நிக்கோலாய் சச்தேவை தனியாக நிற்க வைத்திருப்பார்கள்.
இந்த காணொளியை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.