பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், IT ஊழியர்கள் Work From Home வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அல்லாடி வரும் சூழலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள மால்களை தேடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமை சரியாகும் வரை வீட்டிலிருந்து பணிபுரிய ஐடி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.