
ஆகஸ்ட் 15 – உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடிபோதையில் ஒருவர் தனது 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரில், ஆகஸ்ட் 8-ம் தேதி தனது சகோதரி வெளியே சென்ற போது, தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தனது தாய் இறந்து விட்டதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் அந்த சிறுமியின் தந்தை மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.