தமிழ் சினிமாவில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ரவீனா டாண்டன். இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேஜி இரண்டாம் பாகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை, ஆந்திரா பகுதியில் இவருடைய கார் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மூன்று பெண்களின் மீது வேகமாக மோதியுள்ளது.

அப்போது காரில் இருந்து இறங்கிய ரவீனா ஒரு ஓட்டுநருக்காக அந்த பெண்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .அப்போது அங்கிருந்த சிலர் அவரை தள்ளியுள்ளார்கள்  இதுபோன்று காணொளி வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ரவீனா தள்ளாதீர்கள் தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் என்று கதறுகிறார். மற்றொரு பெண் ரவீனா தன்னை தாக்கியதில் தன்னுடைய மூக்கில் ரத்தம் வருவதாக கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.