நெட்டிசன்களுக்கு இப்போது வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு ராஜ நாகம் (King Cobra) நீலம் மற்றும் ஊதா நிறம் கொண்ட ஒரு சிறிய கரடி தோற்றம் உள்ள தொப்பியை அணிந்து காணப்படுகிறது. இந்த வீடியோவை சஹாபத் ஆலம் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

வீடியோவில், சஹாபத் அந்த நாகப்பாம்பின் அருகில் அமர்ந்து பானம் பருகும் காட்சியுடன் தொடங்குகிறது. அதன்பின், நாகம் கடிக்க முனைந்தபோதும், அவர் பாம்பை கேலி செய்கிறார். சில தருணங்களில் பாம்பின் வாயைத் தொட முயற்சிக்கிறார், வேறொரு சந்தர்ப்பத்தில் அதன் வாலை இழுக்கும் செயலும் இடம்பெறுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SAHABAT ALAM (@sahabatalamreal)

இந்த வீடியோ இணையத்தில் பரவியவுடன், மக்கள் அதனை அழகாகவும் வேடிக்கையாகவும் பார்க்க ஆரம்பித்தனர். “கோப்ரா: சகோ, என்னை சீரியஸாக எடுத்துக்கோங்க. நான் ஒரு ராஜ நாகம்” எனும் காமெடி வரிகளும் பகிரப்பட்டன.

“இது ஒரு வேடிக்கையான வீடியோ அல்ல, நீங்கள் உண்மையில் நாகப்பாம்பை சித்திரவதை செய்கிறீர்கள்” என்ற நெட்டிசன்களின் கடும் விமர்சனங்கள் வலுக்கொள்கின்றன. “நீங்கள் கடிபடும் வரை இது எல்லாம் சிரிப்பு தான். பின்னர் மருத்துவமனையில் நிமிஷம் தோறும் உயிர் போராட வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தவர்களும் உள்ளனர்.