நேற்று சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமை பணியாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், அரசின் திட்டங்களில் உள்ள குறைகளை சரி செய்பவர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பங்கு முக்கியத்துவம் ஆக உள்ளது. அதிகாரிகள் மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். அரசிடமிருந்து பகுதி சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தாய் மொழியான தமிழை சரியாக கற்க வேண்டும். தாய் மொழியான தமிழையும் உலகின் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் கற்ற பிறகு எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.