ரஜினியின் நான் மகான் அல்ல உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் லியோ பிரபு (90) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அடுத்தடுத்து திரை பிரபலங்கள் உயிரிழந்ததால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதி சடங்குகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. காலை 9 மணிக்கு மேல் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.