
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சட்டசபையை விட்டு ஆளுநர் தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறி வெளியேறியது மரபை மீறிய செயல். இதற்கு ஆளுநர் தமிழ்நாட்டை விட்டை வெளியேறிவிடலாம். கருப்பு மீது திமுகவிற்கு ஏன் இந்த வெறுப்பு. நீட் தேர்வின் போது செய்யப்படும் சோதனைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
உங்களுக்கு கருப்பு ஆகாது என்றால் திமுக கொடியிலிருந்தும் கருப்பு நிறத்தை நீக்கிவிடுவீர்களா.? அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவம் போன்றவற்றை மூடி மறைக்க திமுக அரசு பார்க்கிறது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் போட்டியிட்டாலும் போட்டியிடா விட்டாலும் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி களம் காணும் என்றார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது கருப்பு நிற துப்பட்டாவுக்கு போலீஸ் ஆர் அனுமதி மறுத்தது சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது அதனை வைத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஸ்டாலினுக்கு கருப்பை கண்டு ஏன் அவ்வளவு பயம் என்று கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது சீமானும் அதே கேள்வியை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.