தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் ஆயிரம் பரிசை வாங்கி சென்ற நிலையில் பலர் பொங்கல் பரிசை வாங்கவில்லை. இந்த பணம் மீண்டும் தற்போது அரசத்தை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வட சென்னையில் 35,723 ரேஷன் அட்டைதாரர்களும், தென் சென்னையில் 49,538 ரேஷன் அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு பணத்தை வாங்கவில்லை.

இதேபோன்று காஞ்சிபுரத்தில் 8026 ரேஷன் அட்டைதாரர்களும், செங்கல்பட்டில் 10,263 ரேஷன் அட்டைதாரர்களும், திருவள்ளூரில் 8,874 ரேஷன் அட்டைதாரர்களும் பணம் வாங்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 4,39,669 ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பணத்தை வாங்கவில்லை. இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ. 43.96 கோடி மிச்சமாகியுள்ளது. மேலும் இந்த பணத்தை அரசு கருவூலத்தில் தற்போது செலுத்தி விட்டதாக கூட்டுறவுத்துறை ‌ தெரிவித்துள்ளது.