
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் நடிகர் விஜயின் படங்கள் எப்படி இருந்தாலும் வசூல் சாதனை புரியும். குறிப்பாக பீஸ்ட் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றால் கூட 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் படங்களை தயாரிப்பாளர்கள் தயாரிக்க ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் சமீபகாலமாக தியேட்டர் வாசல் முன்பு youtube சேனல்கள் படங்கள் குறித்து ரிவ்யூ பேட்டிகள் எடுப்பதால் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு யூடியூப் சேனல்களுக்கு தியேட்டர் வாசல் முன்பு பேட்டி எடுக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக கங்குவா போன்ற திரைப்படங்களின் வசூல் சாதனை youtube சேனல் பேட்டியால் பாதிக்கப்பட்டதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் சில தயாரிப்பாளர்கள் youtube சேனல்கள் எப்படிப்பட்ட விமர்சனத்தை கொடுத்தாலும் நடிகர் விஜய்யின் படங்களில் மட்டும் வசூல் குறையவே செய்யாது என்று கூறியுள்ளனர். அதாவது இது தொடர்பாக ஒருவர் கூறும்போது பொதுவாக படங்கள் நன்றாக இருந்தாலும் தியேட்டர் வாசல் முன்பு பேட்டி எடுத்து விமர்சனம் செய்வதால் பின்னர் விமர்சனத்தை பார்த்துவிட்டு ஓரிரு நாட்களில் தியேட்டரில் ஆட்கள் வருவது குறைந்து விடுகிறது. ஆனால் விஜய் படத்திற்கு மட்டும் எப்பேற்பட்ட விமர்சனங்களை கொடுத்தாலும் வசூல் குறையாது.
நடிகர் விஜய்க்கு குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் நீங்க என்ன வேணா சொல்லிக்கோங்க நாங்க போய் அவர் படத்தை பார்ப்போம் என்று கூறிவிட்டு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்ப்பதால் வசூல் மழை பொழிகிறது என்று கூறுகிறார். இதேபோன்று வாரிசு படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் படம் வசூல் சாதனை புரியும் என்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் அதனை மகிழ்ச்சியோடு வைரல் ஆக்குகிறார்கள்.
The Unparalleled LEGEND OF KOLLYWOOD..! @actorvijay 👑 #TheGreatestOfAllTime 🐐 pic.twitter.com/S7twwgi3kb
— . (@Reddington94_) November 25, 2024