மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 29-ம் தேதி அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

துல்ஹஜ் மாதம் 29-ம் தேதி (ஜூலை 18) மாலை மொஹரம் மாத பிறை சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஜூலை 20-ம் தேதி மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் யொமே ஷஹாதத், ( மொஹரம் பண்டிகை) ஜூலை 29 கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.