நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.  இந்நிலையில் பஞ்சு மிட்டாயில் (RHODAMINE B) என்ற புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறமிகள் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், பஞ்சுமிட்டாய்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளோம். இதன்பின் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.