விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் தனது கட்சி கொள்கைகள் குறித்து விளக்கமாக பேசினார். மேலும் தனது அரசியல் முன்னோடிகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பல்வேறு அரசியல் கட்சிகளையும் நேரடியாக விமர்சனம் செய்தார். பலரும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை விஜய் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 2026 இல் தமிழ்நாடு மக்களின் தேர்வாக தலைவர் அண்ணாமலை தான் இருப்பார். எந்த வாரிசும் இந்த நடிகரும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை நெருங்க முடியாது. 234 தொகுதிகளில் உள்ள மக்களின் மன துடிப்பை உணர்ந்தவர் அண்ணாமலை தான் என பதிவிட்டுள்ளார்.