தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில்  தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது.

மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல், அரசால் அங்கீகரிக்கப்படாத மருத்துவ முறையில் மருத்துவம் பார்த்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.