தமிழக முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் ஏழாம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதனைப் போலவே 6 முதல் 12 வயது உடைய பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் தேவையான உதவிகளையும் சிறப்பு பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.