மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.  தமிழகத்தில் அரசின் சமீபத்திய எலக்ட்ரிக் வாகன கொள்கை முதலீட்டாளர்களை நன்றாக ஈர்த்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இந்த துறையில் 50 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 1.50 லட்சம் வேலை வாய்ப்பு இலக்காக வைத்துள்ளோம். கிருஷ்ணகிரியில் ரூ.7,614கோடி முதலீட்டில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என அவர் கூறியுள்ளார்.