தனியார் ஓலா மற்றும் ஊபர் செயலிகளுக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று புதிய செயலியை உருவாக்க உள்ளது.

இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு உருவாக்கி தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் நிறுவனம் உருவாக்கும் TATO என்ற ஆட்டோ ரைடு செயலியை தமிழக அரசு இயக்கும் எனவும் இந்த செயலியின் மக்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நியாயமான முறையில் கட்டணம் மற்றும் வருமானம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.