தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வு பள்ளி மாணவர்கள் 49,559 பேரும், தனித் தேர்வர்கள் 1115 பேரும் தேர்வு எழுத வரவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற இருந்த தேர்வில் மொத்தம் 8,51,303 மாணவ மாணவிகள் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் மொழி தேர்வு எழுத 50,000 பேர் வராதது வேதனை அளிப்பதாக விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழியின் அவசியத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடா தமிழகமா என்று விவாதிப்பவர்கள் தமிழில் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.