தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளின் பல கோரிக்கைகள் இடம்பெறாமல் உள்ளது.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பத்து ஆண்டுகளாக பாதித்த தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதில் ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். வருகின்ற வேளாண் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.